ஆரோக்கியம்தமிழ்நாடு
உதட்டை சிவப்பாக்கும் ரோஜா இதழ் பேக்..!
உதட்டை சிவப்பாக்கும் வகையிலான பல பேக்குகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் இப்போது நாம் ரோஜா இதழ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
ரோஜா – 2
தேங்காய்- 4 துண்டு
தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை:
1. தேங்காய்த் துண்டுடன் தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு பால் பிழிந்து கொள்ளவும்.
2. அடுத்து ரோஜா இதழ்களைப் பிரித்து தேங்காய்ப் பாலுடன் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
3. இதில் தேங்காய் எண்ணெய் சேர்த்தால் ரோஜா இதழ் பேக் ரெடி.
இந்த ரோஜா இதழ் பேக்கினை உதட்டில் தடவி அழுத்தித் தேய்க்கவும். இதனை வாரத்தில் 3 முறை என்ற அளவில் பயன்படுத்தவும்.