தமிழ்நாடுஇந்தியாதொழில்நுட்பம்

ஆயுள் முழுவதும் சோறு போடும் LIC ஜீவன் உமங் திட்டம்! ஓரே பிரீமியத்தில் ஓஹோன்னு வாழ்க்கை..!

குறிப்பிட்ட காலத்திற்கு தினமும் சிறிய முதலீடு, அல்லது ஓரே முதலீடு செய்வதன் மூலம் ஆயுள் முழுவதும் நிம்மதியாக வாழத்தேவையான பணத்தை எல்.ஐ.சி வழங்குகிறது. அந்த திட்டம் குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.

இன்றைய சேமிப்பு அல்லது முதலீடே நளைய எதிர்கால வாழ்க்கைக்கு மிக முக்கியமாக விளங்குகிறது. தனியொரு மனிதனுக்கும், குடும்ப வாழ்க்கைகும் இது அத்தியாவசிமாக உள்ளது. சந்தையில் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் இருப்பினும் மக்கள் பாதுக்கான திட்டங்களை தேடிச் செல்வது வாடிக்கை. அதன்படி அரசின் கீழ் இயங்கும் எல்ஐசி திட்டங்களை நம்பகமானதாகவும், மிகவும் பாதுகாப்பானதாகவும் மக்கள் நம்புகின்றனர். LIC ஜீவன் உமாங் (Jeevan Umang) திட்டத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளது. LIC ஜீவன் உமாங் திட்டத்தின் விவரங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்லலாம்.

LIC ஜீவன் உமாங் பாலிசி

எல் ஐ சி ஜீவன் உமங் திட்டத்தின் முதிர்வு வயது 100 என கணக்கிடப்பட்டுள்ளது. உதாரணமாக திட்டத்தில் முதிர்வு வயது 85 என எடுத்துக் கொண்டால் கூட, பாலிசிதாரருக்கு 85 வயது வரை நிலையான நிரந்தர ஓய்வூதியம் கிடைக்கும். விபத்தினால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ரூ.25 லட்சம் மற்றும் 3 வகையான போனஸ் காப்பீடும் கிடைக்கும்.

சில தவிர்க்க முடியாத காரியங்களினால் பிரிமியம் செலுத்துவது தடைபட்டாலும், இந்த பாலிசியின் பிரிமியம் (Premium) செலுத்தும் காலத்தை குறைத்துக்கொள்ளும் வசதியும் உண்டு. உதாரணமாக 10 ஆண்டுகள் பிரீமியம் செலுத்த வேண்டி இருப்பின் அதனை 5 ஆண்டுகளாக குறைந்தது குறைத்துக் கொள்ள முடியும். ஆனால் நாம் செலுத்தியிருக்கும் பிரிமியத்திற்கு ஏற்ப பயன்கள் மாறுபடும் என எல் ஐ சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு… உங்களுக்கு வயது 25 ஆக இருக்கட்டும், நீங்கள் 15 ஆண்டு பீரிமியம் செலுத்துவதாக ஜீவன் உமங் திட்டத்தை தேர்ந்தெடுத்தால், ஒரே பிரீமியமாக ரூ.10,93,406 பணம் செலுத்த வேண்டும். 15 வருடங்களுக்கு பிரீமியம் செலுத்திய பிறகு 40வது வயதிலிருந்து, இந்த தொகையில் 8% ஒவ்வொரு ஆண்டும் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும், இது ஆண்டுக்கு ரூ .72,000 ஆகும்.

பாலிசி நிலையை அறிய

LIC வலைத்தளமான https://www.licindia.in/ -யை பார்வையிடவும். இதற்காக, நீங்கள் முதலில் பாலிசி ஒன்றை பதிவை செய்ய வேண்டும். பதிவு செய்ய https://ebiz.licindia.in/D2CPM/#Register என்ற இணைய இணைப்புக்குச் செல்லவும். இதற்கு பிறகு உங்கள் பெயர், பாலிசி எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிடவும். இதற்குப் பிறகு, நீங்கள் பதிவுசெய்ததும், உங்கள் LIC கணக்கைத் திறந்து நிலையை சரிபார்க்கலாம்.

Back to top button
error: Content is protected !!