சினிமாதமிழ்நாடு
Trending

“ஜனங்களின் கலைஞன்” விவேக்கின் வாழ்க்கைப்பயணம்..!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கிய விவேக் (59) 1961-ஆம் ஆண்டு கோவில் பட்டியில் பிறந்தார். அவரது முழு பெயர் விவேகானந்தன்.

1961 நவம்பர் 19 அன்று அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மகனாக மதுரையில் பிறந்தார் நடிகர் விவேக். இவரது சொந்த ஊர் கோவில்பட்டி – இலுப்பையூரணி.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம் காம் படித்த நடிகர் விவேக், அங்கு சிறிது காலம் டெலிபோன் ஆபரேட்டராக பணிபுரிந்துவந்தார். 1986 அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று தலைமைச் செயலகத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட்டாக வேலைக்கு சேர்ந்தார். 1992 ஆம் ஆண்டு வரை தலைமை செயலக ஊழியராக பணியாற்றினார். தலைமைச் செயலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போதே விவேகானந்தனை விவேக் என மாற்றிய இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் 1987-களில் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

1987 ஆம் ஆண்டு, ‘மனதில் உறுதிவேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமா துறையில் கால்பதித்த விவேக், 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புது புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது.

201904220533454251 Actor Vivek is the director SECVPF

இவர் திரைத்துறையில் 1987ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விவேக் கடைசியாக 2020ஆம் ஆண்டு வெளிவந்த ‘தாராள பிரபு’ படத்தில் நடித்தார்.

இதைத்தொடர்ந்து நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக தன்னை தயார் செய்து கொண்ட விவேக். சிறந்த மேடைப் பேச்சாளர். விவேக் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D %E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D min

திரைப்படங்களில் சீர்திருத்த கருத்துகளையும் பரப்பினார். இதனால் அவரை சின்ன கலைவாணர் என்று ரசிகர்கள் அழைத்தனர். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஆர்வம் காட்டினார்.

மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இதுவரை பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார். 2009-ல் பத்ம ஸ்ரீ விருது விவேக்கிற்கு வழங்கப்பட்டது. நான் தான் பாலா, வெள்ளைப் பூக்கள் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் விவேக் நடித்துள்ளார்.

இவரது நகைச்சுவை கையூட்டு, மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றைத் தாக்குவதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும், ஜனங்களின் கலைஞன் என்றும் அழைக்கின்றனர்.

நடிகர் விவேக்கிற்கு அருள்செல்வி என்கிற மனைவியும் அமிர்தாநந்தினி, தேஜஸ்வனி என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். 3வதாக இருந்த மகன் பிரசன்ன குமார் (13) மூளை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு 2015ம் அக்டோபரில் இறந்தார் என்பது குறிப்பிடதக்கது.

விவேக் பெற்ற விருதுகள்

மத்திய அரசின் 2009ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

ஃபிலிம்பேர் விருதுகள்

  • ரன் – 2002
  • சாமி – 2003
  • பேரழகன் – 2004
  • சிவாஜி – 2007

தமிழ்நாடு அரசின் விருதுகள்

  • ரன் – 2002
  • பார்த்திபன் கனவு – 2003
  • சிவாஜி – 2007

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: