ஆரோக்கியம்

ஏராளமான நோய்களுக்கு மருந்தாகும் மூக்கிரட்டைக் கீரை!

மூக்கிரட்டைக் கீரை சிறந்த மூலிகை போன்று இருப்பதால், இதனை தனியாகவோ, மற்ற கீரைகளுடன் சேர்த்தோ சமைத்துச் சாப்பிடலாம். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, புளி, உப்பு சேர்த்து வதக்கி, துவையலாகச் செய்தும் சாப்பிடலாம். இதன் நன்மைகளை அறிந்து கொள்வோம்.

இதயநோய், சைனஸ், ஆஸ்துமா, சளித்தொல்லை, இரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், தொப்பை, வாதக் கோளாறு, மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், மூலக் கோளாறு உள்ளிட்ட பல நோய்களைத் தீர்க்கும்.

மூக்கிரட்டை வேருடன் சிறிது பெருஞ்சீரகம் சேர்த்து, நீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். அதை தினமும் அருந்தினால், சிறுநீர் அடைப்பு விலகுவதுடன் சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறும்.

கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை முழுமையாக வெளியேற்றும் தன்மை கொண்டது.

மூளைக்கு ஆற்றல் அளித்து மனதிற்கு உற்சாகத்தையும், உடலிற்குச் சுறுசுறுப்பையும் தரக்கூடியது.

மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி இலைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, மோரில் கலந்து குடிக்கலாம். இதை, தொடர்ந்து அருந்தி வந்தால் மங்கலான பார்வை, வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்.

உணவால் ஏற்படும் அலர்ஜிக்கு, நன்றாகக் காய்ந்த மூக்கிரட்டை வேரை இடித்து, ஒரு டம்ளர் நீர்விட்டுக் காய்ச்சி, சிறிது விளக்கெண்ணெய் கலந்து குடிக்கலாம். தினமும் இரண்டு வேளை குடித்தால் அலர்ஜி விலகி சருமம் புதுப்பொலிவு பெறும்.

மூக்கிரட்டை வேரை லேசாக இடித்து, விளக்கெண்ணெய் விட்டுக் காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மலம் இளகும். உடலில் தங்கியிருக்கும் நச்சு நீர், கிருமிகள் வெளியேறி சரும நோய்கள், வாத நோய்கள் விலகும். எடை குறைந்து அழகு மிளிரும்.

மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான், சிறுநெருஞ்சில், மிளகு, சீரகம், திப்பிலி போன்றவற்றை சம அளவு எடுத்து, தூளாக்க வேண்டும். இதை தினமும் இரண்டு வேளை தேனில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறைந்து நல்ல அழகு தரும்.

இதையும் படிங்க:  ஆறிப்போன சுடுநீரை சூடுபடுத்தி குடிக்கலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: