இந்தியா

இந்தியாவில் ஏழு மாதங்களில் இல்லாதளவிற்கு குறைவான பாதிப்பு

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 12 ஆயிரத்து 584 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 167 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கோவிட் – 19 நிலவரம்

இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே நான்கு லட்சத்து 79 ஆயிரத்து 179 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு லட்சத்து 16 ஆயிரத்து 558 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 327 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (ஜன. 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8 லட்சத்து 97 ஆயிரத்து 56 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதுவரை மொத்தம் 18 கோடியே 26 லட்சத்து 52 ஆயிரத்து 887 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!