தொழில்நுட்பம்

சட்டப்பேரவை தேர்தல்.. வெறுப்பு பேச்சுகள் நீக்கப்படும்..

பேஸ்புக் பக்கத்தில் சட்டப் பேரவை தேர்தல் தொடர்பாக பரப்பப்படும் வெறுப்புக் கருத்துகள் உடனடியாக நீக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் பலர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் தொடர்பான வெறுப்பு கருத்துகள், தவறான தகவல்கள், ஓட்டுக்கு பணம் வாங்க அறிவுறுத்தல் போன்ற பதிவுகள் கண்டறியப்பட்டு நீக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது.

சட்டப் பேரவை தேர்தலையொட்டி வெறுப்பு கருத்துகள், தவறான தகவல்கள் குறித்து பேஸ்புக் நிறுவனம் புதிய கொள்கைகளை உருவாக்கியுள்ளது. பகிரப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க 8 வெளி நிறுவனங்களுடன் பேஸ்புக் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் பேஸ்புக்கை 40 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனம், வாக்களிக்க செல்லாதீர்கள், கொரோனா வந்துவிடும் என பரப்படும் செய்திகள் நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதேபோல், டுவிட்டர் நிறுவனமும் பொய்ச்செய்திகள் பகிரப்படுவதைக் கட்டுப்படுத்த புதிய வழிகாட்டுதல்களை கடந்த வாரம் வெளியிட்டது.

இதையடுத்து, பேஸ்புக், டுவிட்டர் ஆகிய இரு சமூக வலைதள நிறுவனங்களும் சுதந்திரமான, நியாமான முறையில் தேர்தல் நடக்க உதவி செய்வதாக தேர்தல் ஆணையத்துக்கு உறுதி அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  சொந்த செயலிக்குத் தடைவிதித்த கூகுள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: