தமிழ்நாடு

இன்று முதல் அறிமுகமாகிறது Ola Electric Scooter – விலை, மைலேஜ் உள்ளிட்ட முழு விபரம் இதோ!!

தமிழகத்தில் அமைந்துள்ள ஓலா பியூச்சர் தொழிற்சாலை மூலம் தயாரிக்கப்பட்டுள்ள ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல இன்று (ஆகஸ்ட் 15) மதியம் 2 மணியளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல ஆன்லைன் கேப் நிறுவனமான ஓலா தயாரித்துள்ள மின்சார வாகனங்களுக்கு பொது மக்களிடையே பலத்த ஆதரவுகள் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில், ஓலா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிப்பதாக அறிவித்திருந்தது. அதன் படி இவ்வகை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தயாரிப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் சமீபத்தில் புதிய வாகனங்களுக்கான முன் பதிவுகளை நிறுவனம் துவங்கியது. இந்த முன் பதிவு துவங்கிய சில மணி நேரங்களிலேயே சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது பதிவுகளை செய்திருந்தனர்.

இதுவே ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கிடைத்த மிகப்பெரும் வரவேற்பாக கருதப்பட்டது. இதை தொடர்ந்து புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வடிவமைப்பு, திறன், வண்ணம் குறித்த விவரங்களை ஓலா நிர்வாகம் வெளியிட்டிருந்தது. ஆனால் விலை குறித்த எவ்வித உறுதியான தகவல்களும் வெளியிடப்படவில்லை என்றாலும் இவை 80,000 ரூபாய் முதல் 1,00,000 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று மதியம் 2 மணியளவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி S1 ஸ்கூட்டர் என்று அழைக்கப்படக்கூடிய இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கிட்டத்தட்ட 10 நிறங்களில் அறிமுகமாக இருக்கிறது. தவிர ஹோம் டெலிவரி, பூட் ஸ்பேஸ், வரம்பு, மலிவான விலை, keyless experience போன்ற அம்சங்களையும் இவை உள்ளடக்கியது என ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். தவிர S1 ஸ்கூட்டரை 18 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தாலே, 50% திறன் கொண்டது எனவும், இவற்றை ஒரு முறை சார்ஜ் செய்யும் போது 150 கிமீ தூரத்திற்கு பயணிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  சுற்றுலா தலங்கள் திறப்பு – கொடைக்கானலில் குவியும் மக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: