காலிப்பணியிடங்கள்:
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Office Assistant பணிக்கு 06 காலிப்பணியிடம் மற்றும் Driver பணிக்கு 01 காலிப்பணியிடம் என மொத்தமா 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் LMV லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும், மேலும் விண்ணப்பதாரர்கள் நல்ல உடல் தகுதி வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் BC / MBC / DNC விண்ணப்பதாரர்களுக்கு 34 வயது மற்றும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 37 வயது என்றும் வயது வரம்பு அளித்துள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் நபர்கள் தேர்வாகும் பணிக்கு தகுந்தாற்போல், Office Assistant பணிக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரையும், Driver பணிக்கு ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரையும் ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட படி விண்ணப்பங்களை தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும்படி தபால் செய்யவும். மேலயும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதிக்கு நாளாக 28.04.2022 என தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh