தமிழ்நாடு

தமிழகத்தில் தமிழறிஞர்களுக்கு மாதம் உதவித்தொகை பெற விண்ணப்பதிவு – ஆகஸ்ட் 31 கடைசி நாள்!!

தமிழகத்தில் உள்ள தமிழறிஞர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உதவிதொகை பெற ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பலர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். தனியாய் நிறுவன ஊழியர்கள் முதல் அன்றாடம் தொழில் செய்யும் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பினை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ளார்.

இந்த உதவித்தொகை பெற 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதியுடன் 58 வயது பூர்த்தி அடைய வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ் பணியாற்றியமைக்கான ஆதாரங்கள், இரண்டு தமிழறிஞர்களிடம் தமிழ்ப் பணி ஆற்றிவருவதற்கான தகுதி நிலைச் சான்றுகளையும் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இந்த உதவித்தொகை பெற நேரடியாகவோ அல்லது தமிழ் வளர்ச்சி துறை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் தமிழறிஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3,500 மற்றும் மருத்துவப்படியாக ரூ.500 அவரது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். எனவே விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: