வேலைவாய்ப்பு

தேர்வு, நேர்காணல் இல்லாமல்! தமிழக ரயில்வே துறையில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

Deputy General Manager (S & T)/ Manager (S & T) பணியிடங்களை நிரப்ப சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 24.09.2021 உடன் முடிவடைய உள்ளதால், திறமையானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் Deputy General Manager (S & T)/ Manager (S & T) ஆகிய பதவிகளுக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Electronics & Communication (ECE) / Electrical & Electronics Engineering (EEE) ஆகிய பாடங்களில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Assistant Officer/ Senior Supervisor பதவிகளில் 7 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது அதிகபட்சம் 25.08.2021 தேதியின் படி, அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். பதிவு செய்வோர் தேர்வு & நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யபடுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 24.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official PDF Notification – https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-DEP-09-2021-dated-25-08-2021.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு!
Back to top button
error: