காலிப்பணியிடங்கள்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வெளியிட்ட அறிவிப்பில் Village Assistant பணிக்கு என 5 இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி விவரம்:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி/ கல்வி நிலையங்களில் 5 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
- விண்ணப்பதாரருக்கு கட்டாயம் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- Village Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது எனவும் அதிகபட்சம் 32 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- SC, SCA, ST, BC, BC(Muslim), MBC, DNC ஆகிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம் :
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு முறை:
Village Assistant பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் விண்ணப்பத்தை தயார் செய்து ஒட்டன்சத்திரம் மாவட்ட ஆட்சியரிடம் 27.04.2022 என்ற இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத மற்றும் இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh