வேலைவாய்ப்பு

ரூ.15,000/- சம்பளத்தில் தமிழக அரசு குழந்தைகள்‌ நல மருத்துவமனை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

கோவிட்‌ 19 பேரிடர்‌ மற்றும்‌ கொரோனா நோய்‌ தடுப்பு பணிகள்‌ மேற்கொள்வதற்காக சென்னை அரசு குழந்தைகள்‌ நல மருத்துவமனைக்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில்‌ ஆறு மாதங்களுக்கு மட்டும்‌ தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 24.08.2021 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிறுவனம் – சென்னை அரசு குழந்தைகள்‌ நல மருத்துவமனை
பணியின் பெயர் – Lab Technician, Radiographer, Dialysis Technician & more
பணியிடங்கள் – 21
விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.08.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

Radiographer 2
Dialysis Technician 5
ECG Technician 2
CT Scan Technician 2
Anaesthesia Technician 5
Lab Technician 5

மாத சம்பளம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.12,000/- முதல் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள்‌ தங்களது அனைத்து கல்வித்‌ தகுதியின்‌ சான்றிதழ்களின்‌ நகல்களுடன்‌ புகைப்படத்துடன்‌ கூடிய விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ நேரிலோ அல்லது தபால்‌ மூலமாகவோ அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

விண்ணப்பங்கள்‌ அனுப்ப வேண்டிய முகவரி:-

இயக்குநர்‌ மற்றும்‌ பேராசிரியர்‌(மு கூபொ)
அரசு குழந்தைகள்‌ நல மருத்துவமனை மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌
எழும்பூர்‌, சென்னை -8.

குறிப்பு :

நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌(24.08 .2021) பிறகு கிடைக்கப்‌ பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படமாட்டாது. இப்பணியிடங்கள்‌ முழுவதும்‌ முற்றிலும்‌ தற்காலிகமானது மற்றும்‌ ஒப்பந்த அடிப்படையில்‌ ஆறு மாதங்களுக்கு மட்டும்‌ நிரப்பப்பட உள்ளன. மேலும்‌ இப்பணியிடங்கள்‌ எக்காரணம்‌ முன்னிட்டும்‌ பணி வரன்முறை மற்றும்‌ நிரந்தரம்‌ செய்யப்பட மாட்டாது எனத்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

Official PDF Notification – https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/08/2021082059.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தமிழக அரசு நீர்வளத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Back to top button
error: