வேலைவாய்ப்பு

8/ 10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள Solider Technical, Solider General, Solider Tradesman, Solider Clerk ஆகிய பணிகளுக்காக ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக கடந்த ஜூலை மாதத்தில் அறிவிப்பு வெளியானது. அதில் திருச்சி, அரியலூர், கரூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, மயிலாடுதுறை & காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • வயது வரம்பானது குறைந்தபட்சம் 17 1/2 வபயது முதல் அதிகபட்சம் 23 வயது வரை இருக்க வேண்டும்
  • மத்திய/ மாநில அரசுகளின் பாட்டத்திட்டங்களின் கீழ் 8/ 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் PFT, PMT & Written Exam (CEE) மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்
  • இந்த பேரணி (Rally) ஆனது வரும் செப்டம்பர் மாதத்தில் 15 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • அவற்றிற்கான அட்மிட் கார்டு ஆனது வரும் 06.09.2021 அன்று வெளியாக உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 30.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆனால் நாளையோடு அதற்கான அவகாசம் முடிவுபெற உள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Official PDF Notification – https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/Trichy_Notn.pdf

Apply Online – https://joinindianarmy.nic.in/Authentication.aspx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: