வேலைவாய்ப்பு

ரூ.35,000/- ஊதியத்தில் ஜிப்மர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான JIPMER புதுச்சேரியில் காலியாக உள்ள Senior Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நிறுவனம் – JIPMER
பணியின் பெயர் – Senior Research Fellow
பணியிடங்கள் – 01
கடைசி தேதி – 23.08.2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

JIPMER பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

வயது வரம்பு:

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் வயதானது அதிகபட்சம் 32க்குள் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கல்வித்தகுதி :

பதிவு செய்ய விழைவோர் Biotech/ Molecular/ Cell Biology/ Bio Chemistry ஆகிய பாடங்களில் M.Sc அல்லது M.Tech (Biotech) அல்லது M.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 23.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் sunil.narayan@jipmer.edu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Official PDF Notification – http://jipmer.edu.in/sites/default/files/Applications%20invited%20for%20Senior%20Research%20Fellow%20position%20under%20SERB-CRG%20Sponsored%20project.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு எழுத தேவையில்லை!
Back to top button
error: