உலகம்

வடகொரிய இளைஞர்களுக்கு வந்த சோதனை.. கிம் ஜாங் உன் போட்ட அதிரடி உத்தரவு..!

வடகொரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். உலகில் மிகக் குறைந்த வயதில் அதிகாரங்களைப் பெற்ற தலைவர்களில் முக்கியமானவர்.

இவர், விண்வெளி ஆராய்ச்சி, அணுகுண்டு சோதனை என அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கே சவால் விடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தங்கள் நாட்டின் கலாச்சாரத்தை காக்கும் பொருட்டு, உடை மற்றும் அலங்காரங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

கிழிந்த மற்றும் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் போடக்கூடாது என்றும் உடல் பாகங்களில் வளையங்கள் அணியக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

பின்புறம் அதிக முடிகளுடன் ஹேர்ஸ்டைல் செய்வது உள்ளிட்ட பேஷன் நடவடிக்கைகளுக்கு கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: