பொழுதுபோக்கு

குழந்தைகளுக்குப் பிடித்தமான ஆலு சப்பாத்தி!

நாம் இப்போது சுவையான ஆலு சப்பாத்தி ரெசிபி செய்து கொடுத்து வீட்டில் உள்ளோரை அசத்தலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 100 கிராம்
சீரகம் – 1/2 ஸ்பூன்
பச்சைமிளகாய் – 3
உருளைக்கிழங்கு – 2
கரம் மசாலாத்தூள்- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை- தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

பச்சை மிளகாய், கறிவேப்பிலையினை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

உருளைக்கிழங்குடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேகவைத்து தோ உரித்து மசித்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் உருளைக் கிழங்கு, உப்பு, சீரகம், பச்சைமிளகாய், கரம் மசாலாத்தூளைச் சேர்த்து கையால் கலக்கவும்.

அடுத்து கோதுமை மாவினை சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அத்துடன் உருளைக்கிழங்கு மசாலா சேர்த்து ஊறவிட்டு உருண்டை பிடிக்கவும்.

அடுத்து வாணலியில் தோசை கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி சப்பாத்தி போல் தேய்த்து போட்டி வேகவிட்டு எடுத்தால் ஆலு சப்பாத்தி ரெடி…!!


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  செரிமானப் பிரச்சினைகளைச் சரிசெய்யும் இஞ்சித் துவையல்!
Back to top button
error: