இந்தியா

மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்..

மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு மணி நேரம் 50 நிமிடம் வாசித்தார்.

மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

*நடப்பு நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை 9.5 சதவீதமாக உள்ளது.

*வரும் நிதி ஆண்டில் வௌி சந்தையில் இருந்து 12 லட்சம் கோடி நிதி திரட்ட திட்டம்.

*பிப்ரவரி மாத செலவுக்காக 80,000 கோடி கடன் வாங்க முடிவு

*தங்கத்தின் மீதான இறக்குமதி வரி விதிப்பு 12.5 லிருந்து 10 சதவீதமாக குறைப்பு

*விவசாய கடன் தர 16.5 லட்சம் கோடி இலக்கு.

*மின் விநியோகத்தில் தனியாருக்கு அனுமதி.

*புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை திட்டம்.

*கரோனா தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

*தமிழகத்தில் சாலை பணிகள் மேற்கொள்ள 1.03 லட்சம் கோடி. 3,500 கிமீ நீளத்திற்கு சாலை மேம்பாடு.

*சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 63,246 கோடி.

*ரயில்வே துறையை மேம்படுத்த 1.10 லட்சம் கோடி

*ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க முடிவு

*மின் உற்பத்தி மேம்படுத்த 3 லட்சம் கோடி.

*15 ஆயிரம் பள்ளிகள் மேம்படுத்தப்படும். 100 ராணுவ பள்ளிகள் திறக்கப்படும்.

*ஆதி திராவிட மாணவர்களுக்கு 35,219 கோடி.

*75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதிதாரர்கள் வருமான வரியில் இருந்து விலக்கு.

*டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க 1500 கோடி.

*தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு மூலதன நிதியாக 20 ஆயிரம் கோடி.

*காப்பீடு துறையில் அந்நிய முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 79 சதவீதமாக உயர்வு.

*சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 64,180 கோடி.

*சுகாதாரத்துறைக்கு 2.23 லட்சம் கோடி.

*500 நகரங்களில் குடிநீர் திட்டத்தை செயல் படுத்த 2.87 லட்சம் கோடி.

Back to top button
error: Content is protected !!