தமிழ்நாடுஆரோக்கியம்
கோடை காலத்திற்கு ஏற்ற கேழ்வரகு கூழ்..!

கோடை காலத்தில் நாம் பொதுவாக குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிட்டால் மட்டுமே உடல் நலம் பெற முடியும். இப்போது நாம் கேழ்வரகில் கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கேழ்வரகு மாவு- 150 கிராம்
- பச்சரிசி மாவு- 50 கிராம்
- தயிர்-1 கப்
- சின்ன வெங்காயம்-6
- பச்சை மிளகாய்-1
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவைப் போட்டு தண்ணீர் ஊற்றி பிசையவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பச்சரிசி மாவைப் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
பச்சரிசி மாவுக் கலவையில் கேழ்வரகு மாவுக் கலவையை ஊற்றி, உப்பை சேர்த்து கிளறிக் கொண்டே நன்கு வேகவிட்டு இறக்கவும்.
அடுத்து கேழ்வரகு மாவுக் கலவையில் தயிரைச் சேர்த்து வெங்காயம் பச்சை மிளகாயை நறுக்கிப் போட்டால் கேழ்வரகு கூழ் ரெடி…