உலகம்

நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கன் அதிபர்? எங்கள் நாட்டில் இல்லை – கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் அறிவிப்பு!

அஃப்கானிஸ்தான் அதிபர் பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறிய அஷ்ரஃப் கனி, தங்கள் நாட்டிற்கு வரவில்லை என கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் அரசுகள் அறிவித்துள்ளன.

ஆப்கன் அதிபர் பதவியை ராஜினாமா செய்த அஷ்ரஃப் கனி, தஜிகிஸ்தானுக்கு தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகின. அதே சமயம் அவர் கஜகஸ்தான் நாட்டுக்கு சென்றதாக மற்றொரு தகவல் பரவியது.‌ ஏராளமான பணத்துடன் ஹெலிகாப்டரில் அஷ்ரஃப் கனி ஆப்கனை விட்டு தப்பியோடியதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்தது.

ஆனால், கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே, அஷ்ரஃப் கனி தங்கள் நாட்டுக்கு வரவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

இதையடுத்து, அஷ்ரஃப் கனி மற்றும் ஆப்கனின் பிற தலைவர்கள் உஸ்பெகிஸ்தான் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை உஸ்பெகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.

இதனிடையே, அஷ்ரஃப் கனி, தற்போது ஓமன் நாட்டில் இருப்பதாகவும், அவர் அமெரிக்காவில் குடியேற முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: