இந்தியா

ஊதிய உயர்வு கோரி 3-வது நாளாக கர்நாடக ‍போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்.. மக்கள் கடும் அவதி..!

கர்நாடகாவில், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்‍கையை வலியுறுத்தி, அரசு போக்‍குவரத்து ஊழியர்கள் 3-வது நாளாக நடத்திவரும் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, ப‌யணிகள் கடும் அவதிக்‍கு ஆளாகியுள்ளனர்.

கர்நாடகாவில் அரசு போக்‍குவரத்து ஊழியர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்‍கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் முதல், மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில தொழிலாளர்கள் மட்டும் பணிக்கு வந்த நிலையில், மாநிலத்தில் அரசு பேருந்து சேவைகள் முடங்கின. இதனால், பிற மாநிலங்களிலிருந்து கர்நாடகா செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகத்திலிருந்து பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநில பகுதிகளுக்கு தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் 30 பேருந்துகள் கூடுதலாக இன்று இயக்கபடுகின்றன. இதனால் நேற்று இருந்த கூட்ட நெரிசல் சற்று குறைந்து பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மீது எஸ்மா உள்ளிட்ட சட்டங்களின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த கர்நாடக அரசு, ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: