இந்தியா

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி!

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, அதில் எனக்கு பாசிட்டிவ் என்று பரிசோதனை முடி வந்தது என்று பிஎஸ் பொம்மை கூறினார். எனக்கு கொரோனாவின் லேசான அறிகுறிகள் உள்ளன. என் உடல்நிலை நன்றாக இருக்கிறது நான் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

சமீபத்தில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கும் இன்று திங்கள்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: