பொழுதுபோக்கு

சத்துகளும் சுவையும் நிறைந்த காராமணி குழம்பு!

பல்வேறு ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த காராமணியில் சுவையான காராமணி குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1 கப் காராமணி / தட்டைப்பயிறு – கால் கிலோ (ஊறவைத்தது)
புளி – எலுமிச்சை பழ அளவு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
பூண்டு பல் – 5 அல்லது 10
தக்காளி – 1
சாம்பார் தூள் / மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தனியாத்தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

அரைக்க:

தேங்காய் – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 2
சீரகம் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1 நறுக்கியது

செய்முறை:

காராமணியை 6 முதல் 8 மணி நேரம் ஊற வைத்து, காலையில் எடுத்து பிரஷர் குக்கரில் சேர்த்து 2 அல்லது 3 விசில் வைக்கவும். காராமணி வெந்ததும் தண்ணீரை வடிகட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளியை ஊறவைத்து தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு பல் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வேகவைக்கவும்.

அதனுடன் சாம்பார் தூள் அல்லது மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், தனியாத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பின்னர் புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். மூடி வைத்து வேகவைக்கவும். எண்ணெய் பிரியும் வரை வேகவைத்து, அதனுடன் வேகவைத்த காராமணி சேர்த்துக் கலக்கவும். அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து 1 அல்லது 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும். சுவையான காராமணி குழம்பு தயார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: