சினிமாபொழுதுபோக்கு

8 வருடங்களுக்கு பிறகு பாரதியை சந்திக்கும் கண்ணம்மா – வெளியான ப்ரோமோ!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது 8 வருடங்களுக்கு கட்டட நிலையில் இதுவரை கண்ணம்மாவும், பாரதியும் பார்த்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் இன்றைய எபிசோடில் வேணுவிற்கு விபத்து ஏற்பட்ட நிலையில் கண்ணம்மா காப்பாற்ற ஹாஸ்பிடலில் பாரதியும் கண்ணம்மாவும் சந்தித்து கொள்கின்றனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தினமும் சௌந்தர்யா கண்ணம்மாவை எப்படியாவது தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார். எப்படியாவது ஹேமாவை கண்ணம்மாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வேணுவிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில் வேணு ரோட்டில் போய்க்கொண்டிருக்கும் ஒரு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட அங்கு வரும் கண்ணம்மா தனது மாமா ரோட்டில் அடிபட்டு கிடப்பதை பார்த்து கதறி அழுகிறார். அங்கிருப்பவர்கள் உதவியால் வேணுவை மருத்துவமைக்கு அழைத்து செல்கிறார் கண்ணம்மா.

வேணுவை பார்த்த டாக்டர் அது பாரதியின் அப்பா தான் என்று கண்டுபிடித்து விடுகிறார். பாரதிக்கு கால் செய்து அவரது அப்பாவிற்கு நடந்த விபத்தை பற்றி சொல்கிறார். மேலும் ஒரு பெண் தான் அவரை காப்பாற்றியதாகவும் சொல்கிறார். பாரதியும் தான் வரும் வரை அந்த பெண்ணை அங்கேயே இருக்க சொல்ல சொல்கிறார்.

kb2 1

கண்ணம்மாவும் பாரதி வரும் விஷயம் தெரியாமல் அங்கேயே இருக்க உள்ளே வேணுவிடம் சென்று நீங்க நல்லா இருக்கணும். உங்களை காப்பாத்த தான் அங்க நான் வந்திருக்கேன் போல என்று சொல்லி அழுது அங்கிருந்து செல்கிறார். அப்பொழுது பார்த்து வேணு கண்முழிக்க கண்ணம்மா என்று கத்துகிறார்.

கண்ணம்மாவும் வெளியே செல்ல அப்பொழுது பாரதியும் உள்ளே வர 8 வருடங்களுக்கு பிறகு கண்ணம்மாவும் பாரதியும் பார்த்துக்கொள்கின்றனர். அடுத்து வேணு கண்ணம்மாவை நீ கண்டிப்பா வீட்டுக்கு வரணும் வா என்று கெஞ்சுகிறார். பாரதியிடம் கண்ணம்மாவை வீட்டிற்கு அழைத்து வரும்படி கூறுகிறார். இதோடு ப்ரோமோ முடிவடைந்தது.

Back to top button
error: Content is protected !!