வேலைவாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு! விண்ணப்பங்கள் வரவேற்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

பணியிடங்கள்

இளைஞர் நீதி குழுமத்திற்கு (Juvenile Justice Board) கீழ் பணிபுரிய 01 பெண் உட்பட 02 சமூக நல உறுப்பினர்கள் (Social Worker Member) பதவிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது 35 ஆண்டுகள்.
அதிகபட்ச வயது 65 ஆண்டுகள்.

கல்வித் தகுதி

ஏதேனும் ஒரு பிரிவில் (குழந்தை உளவியல்/ மனநல மருத்துவம்/ சமூகவியல்/ சட்டம்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேவைப்படும் அனுபவம்

உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 07 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்ப படிவத்தை (Application Form) காஞ்சிபுரம் மாவட்ட அரசு வலைதளத்தில் (kancheepuram.nic.in) இருந்து பதிவிறக்கம் (Download) செய்துகொள்ள வேண்டும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான நகல்களுடன் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.317 K.T.S. மணி தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 502.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.11.2021.

Official Notification And Application Form – https://kancheepuram.nic.in/notice_category/recruitment/


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தேர்வு இல்லாமல்! தமிழக அரசில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
Back to top button
error: