தமிழ்நாடுமாவட்டம்

கமல்ஹாசன் நாளை கோவையில் 5-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்குகிறார்

5-ம் கட்டமாக கமல்ஹாசன் கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 10-ந்தேதி (நாளை) முதல் 13-ந்தேதி வரையிலான 4 நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறார்.

கோவையில் 10-ந்தேதி மாலை 3 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புடன் இந்த பயணம் தொடங்குகிறது. தொடர்ந்து நட்சத்திர ஓட்டலில் உள் அரங்கு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர், சின்னியம்பாளையம் பஸ் நிலையம், சவுரிப்பாளையம், சீரநாயக்கன்பாளையம், மாதம்பட்டி, துடியலூர், சரவணம்பட்டி, அன்னூர், அவிநாசி, பெருமநல்லூர், குன்னத்தூர், கோபிச்செட்டிப்பாளையம் பஸ் நிலையம், பவானி, கனி ராவுத்தர்குளம் பஸ் நிலையம், மொடக்குறிச்சி பஸ் நிலையம், தாராபுரம், உடுமலைப்பேட்டை காந்தி நகர், பொள்ளாச்சி திடல், பொள்ளாச்சி தலைமை அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.

இதேபோல தனது சுற்றுப்பயணத்தின்போது மாணவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பல்வேறு தரப்பினரையும் கமல்ஹாசன் சந்தித்து பேசுகிறார்.

Back to top button
error: Content is protected !!