ஆரோக்கியம்

இளமை அழகைக் கொடுக்கும் கலாக்காய்!

காலாக்காய் என்பது காய், பழம், வேர் என அனைத்து வகையிலும் பயன்படும் மருத்துவ குணம் கொண்ட காயாகும். அதன் பயன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

தலைமுடி மற்றும் சருமத்தை பாதுகாக்க ஒரு சிறந்த பழமாக கலாப்பழம் (கலாக்காய்) விளங்குகிறது.

வயது முதிர்வைத் தடுக்கும் க்ரீம் மற்றும் ஜெல் போன்றவற்றில் கலாக்காய் ஒரு முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது.

பருக்கள் மற்றும் கட்டிகள் மூலமாக சருமத்தில் உண்டாகும் தழும்புகளை போக்கி களங்கமற்ற சருமத்தை உண்டாக்குகிறது.

இலைகளின் கசாயம், விட்டு விட்டு வரும் காய்ச்சலுக்கு மருந்தாகும்.

வேர் வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. கசப்பானது. வயிற்றுப்போக்கு தூண்டுவது. சொறி சிரங்கு போக்கவும் பயன்படுகிறது.

உணவு உண்டபின் இந்த பழம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகி நன்றாக பசியெடுக்கும்.

உடல் உஷ்ணம் காரணமாக தொண்டையில் ஏற்படும் வலியை கலாப்பழம் குணப்படுத்துகிறது.

உடல் சூட்டினை சமன்படுத்தும் தன்மை கலாப்பழத்திற்கு அதிகம் உண்டு.

கலாக்காயை சாப்பிட்டு வர பித்த வாந்தியில் இருந்து விடுபடலாம்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை கலாப்பழத்திற்கு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: