மாவட்டம்சினிமாதமிழ்நாடுபொழுதுபோக்கு

சிறிய உணவகத்தில் கணவருடன் சாப்பிட்ட காஜல் அகர்வால்.. பிடித்த மெஸ் என்று ட்வீட்..!

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் பொள்ளாச்சியிலுள்ள ஒரு சிறிய உணவகத்திற்கு சென்று உணவருந்தியுள்ளார். அந்த உணவகத்தில் சமைக்கப்படும் உணவு மிகவும் ருசியானது என்று கூறி அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

காஜல் அகர்வால்:

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மட்டுமல்லாது இந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர். அவர் கொரோனா ஊரடங்கின் போது தொழிலதிபர் கவுதம் கிச்சுலு என்பவரை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே பங்கேற்ற இவர்களது திருமண புகைப்படங்கள் அப்போது இணையத்தில் வைரலானது.

kajal 1

இந்நிலையில் சமீபத்தில் தனது கணவருடன் பொள்ளாச்சிக்கு சென்றிருந்த காஜல் அங்கிருந்த சாந்தி மெஸ் என்ற சிறிய உணவகத்தில் உணவருந்தியுள்ளார். அந்த உணவகத்தின் உரிமையாளர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டவர் “பொள்ளாச்சியில் சாந்தி மெஸ் எனக்கு மிகவும் பிடித்த உணவகமாகும். இங்கு உணவு மிகவும் சுவையாக இருப்பதோடு உணவு பரிமாறும் சாந்தி அக்காவும், பாலகுமார் அண்ணாவும் என்னிடம் மிகவும் பாசமாக நடந்து கொள்வார்கள். மேலும் கடந்த 27 வருடங்களாக உணவின் சுவையும் தரமும் மாறாமல் இருக்கும் இந்த உணவகத்திற்கு நான் 9 வருடங்களாக வந்து செல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Back to top button
error: Content is protected !!