ஆரோக்கியம்தமிழ்நாடு

எல்லா வயதினர்களையும் தாக்கும் சர்க்கரை நோய்! அது வராமல் தடுக்க இதை மட்டும் செய்தால் போதும்!

ஒரு காலத்தில் சர்க்கரை நோய் என்பது வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும்.

ஆனால் தற்போதைய காலகட்டத்தில் எல்லா வயதினருக்கும் ஏற்படுகிறது.

மாறி வரும் உணவு பழக்கம், வாழ்க்கை முறை இவையெல்லாம் தான் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளது.

சில விடயங்களை பின்பற்றினால் சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும்.

சரியான உடல் எடை

சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்க உடல் எடையை சரியான அளவில் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.

இதோடு உடல் எடை குறியீட்டு எண்ணையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் சர்க்கரை நோய் வருவதை 70% வரை தடுக்கலாம்.

சாலட்

காய்கறிகள், கீரைகள், பழங்கள் அடங்கிய சாலட் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. இதில் கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், கீரை மற்றும் பூண்டு சேர்த்து சாப்பிடலாம்.

அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து தினமும் மதிய உணவிற்கு முன் அல்லது இரவு உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை சேராமல் தடுக்கப்படும்.

அதிகமாக நடப்பது

உடற்பயிற்சி என்பது உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுதோடு ஆரோக்கியமாக வைத்து இருக்கவும் உதவுகிறது. எனவே தினசரி 40 நிமிடங்கள் நடந்தால் உடலின் மெட்டாபாலிசம் அதிகரித்து இன்சுலின் அளவை சரியாக்கி சர்க்கரை நோய் வருவது தடுக்கப்படுகிறது.

காபி

ஒரு நாளைக்கு 2 கப் காபி குடித்து வந்தால் டைப் 2 நீரிழிவு வருவதை தடுக்கலாம். காபியிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமக்கு இந்த நன்மைகளை அளிக்கிறது. காபியை சர்க்கரை இல்லாமல் குடிப்பது நலன் பெயர்க்கும்.

துரித உணவுகள்

பிரைட் ரைஸ், பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை சாப்பிட கூடாது. இதையெல்லாம் சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால், ஜீரண சக்தி பிரச்சனைகள் ஏற்படும்.

இந்த மாதிரியான உணவுகள் நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து, சர்க்கரை நோய் வர காரணமாக அமைந்து விடுகின்றன.

மன அழுத்தம்

மன அழுத்தம் தான் எல்லா விதமான நோய்க்கும் காரணமாகும். இது சர்க்கரை நோய் வருவதற்கும் முக்கிய காரணமாக உள்ளது. எனவே யோகா, தியானம் போன்றவற்றை செய்து மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் சர்க்கரை நோய் இல்லாமல் நீண்ட காலம் நாம் வாழலாம்.

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் மட்டுமே வரும் என பலர் நினைக்கலாம். ஆனால் அதன் காரணமாக சர்க்கரை நோயும் ஏற்படுகிறது, அதனால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

Back to top button
error: Content is protected !!