இந்தியா

டெல்லியில் கொரோனா பாதிப்பால் நீதிபதி உயிரிழப்பு..!

டெல்லியில் கொரோனா வைரசால் பாதிப்பட்ட நீதிபதி வேணுகோபால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள், நீதித்துறையினர், அரசியல் கட்சியினர் உள்பட அனைத்து தரப்பினரும் தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் டெல்லியில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதியாக செயல்பட்டு வருபவர் கோவை வேணுகோபால். 47 வயதான அவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் டெல்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நீதிபதி வேணுகோபால் நேற்று உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: