தொழில்நுட்பம்

333 ரூபாயை வைத்து லட்சாதிபதி ஆகலாம்.. இந்தத் திட்டத்தில் சேருங்க!

தினமும் 333 ரூபாய் முதலீடு செய்து 10 ஆண்டுகளில் ரூ.16.28 லட்சம் சம்பாதிக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் குறித்து இங்கே பார்க்கலாம்.

Post Office Saving Schemes 1460709527

போஸ்ட் ஆபீஸ்

இந்திய தபால் துறையானது வங்கிகள் போலவே பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கப் பல முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் என வருமான வரி விலக்கு அளிக்கக் கூடிய சேமிப்பு திட்டங்களையும் தபால் அலுவலகங்கள் வழங்கி வருகின்றன. அஞ்சல் அலுவலகத்தில் பல திட்டங்கள் உள்ளன. இங்கு முதலீடு செய்தால் நீங்கள் நல்ல வருவாயைப் பெறலாம். தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களின் சிறப்பம்சம் என்னவென்றால், உங்களது முதலீடு முற்றிலும் பாதுகாப்பான முறையில் சிறந்த வருவாயைத் தரும்.

money

 

ரெக்கரிங் டெபாசிட்

நல்ல லாபத்தை நோக்கி முதலீடு செய்பவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் நிலையான வட்டி வருமானம் கிடைப்பதோடு சேமிப்புப் பணமும் பாதுகாப்பாக இருக்கும். மாதத்துக்கு ரூ.10,000 வரையில் சேமித்து குறுகிய காலத்தில் லட்சாதிபதி ஆகமுடியும். இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். தேவைப்பட்டால் நீங்கள் அடுத்த 5-5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம். ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் தினசரி 100 ரூபாய் சேமித்தால் கூட போதுமானது. இத்திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை.

2000 money

லட்சாதிபதி ஆவது எப்படி?

ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 5.8 சதவீத வட்டி கிடைக்கிறது. இத்திட்டத்தில் தினசரி ரூ.333 முதலீடு செய்ய வேண்டும். அதாவது ஒரு மாதத்துக்கு ரூ.10,000 சேமித்தால் இத்திட்டத்தின் முதிர்வு காலத்தில் உங்களுக்கு ரூ.16.28 லட்சம் கிடைக்கும். அதாவது 10 ஆண்டுகளில் இந்த இலக்கை நீங்கள் அடைய முடியும்.

emi money 2

 

பயன்கள்

இத்திட்டத்தின் கீழ் நீங்கள் தனி கணக்காகவோ அல்லது இணைப்பு கணக்காகவோ தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை பெயரிலும் இத்திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ.100 முதலீடு செய்ய முடியும். இத்திட்டத்துக்கான வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதேபோல, சேமிப்புக் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்துக்கு மாற்ற முடியும். ஒரு வருடம் கழித்து உங்களது டெபாசிட் தொகையில் 50 சதவீதம் வரையில் கடன் பெறும் வசதியும் இத்திட்டத்தில் உள்ளது.

Back to top button
error: Content is protected !!