காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், Database Administrator மற்றும் Programmer ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் வீதம் என மொத்தமாக 02 பணியிடங்கள் தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தில் (DPHPM) காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் EEE / ECE / IT / CS போன்ற பாடப்பிரிவில் B.E / B.Tech Degree அல்லது MCA அல்லது M.Sc Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
- Data Base Administrator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Oracle, Postgres, MS SQL போன்ற கணிப்பொறி மொழியில் கைதேர்ந்தவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.
- Programmer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் J2EE, Java, VB, Dot .NET போன்ற கணிப்பொறி மொழியில் கைதேர்ந்தவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.
அனுபவ விவரம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 03 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
ஊதிய விவரம்:
இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.40,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
தேர்வு முறை:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 03.08.2022 அன்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி:
Directorate of Public Health and Preventive Medicine,
359, DMS Campus, Anna Salai,
Teynampet, Chennai – 600 006.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh