காலிப்பணியிடங்கள்:
TNUSRB அறிவிப்பின் படி மொத்தம் 3552 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் காவல் துறைக்கு 2180 இடங்களும், புலனாய்வுத் துறையில் 1091 இடங்களும், சிறைத் துறையில் 161 இடங்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 120 இடங்களும் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
July 1, 2022 தேதியின் படி, போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டர் மற்றும் ஃபயர்மேன் போன்ற அனைத்து காலியிடங்களுக்கும்வயது வரம்பு 18 முதல் 26 ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. SC/ST/BC/MBC இடஒதுக்கீடு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு/எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
தேர்வு முறை:
- TNUSRB தேர்வு மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.
- எழுத்துத் தேர்வு (தமிழ் மொழித் தகுதித் தேர்வு + முதன்மைத் தேர்வு), உடல் திறன் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள்.
- எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் என்சிசி, என்எஸ்எஸ், ஸ்ப்ராட்ஸ்/கேம்ஸ் சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.
தேர்வு கட்டணம்:
தேர்வுக் கட்டணமாக ரூ.130/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
- tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில், Gr.II போலீஸ் கான்ஸ்டபிள்கள், Gr.II ஜெயில் வார்டர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2022 பொது ஆட்சேர்ப்பின் கீழ் “Online Application” என்பதைக் கிளிக் செய்யவும்.
- பதிவு செய்து விண்ணப்ப செயல்முறையைத் தொடரவும்.
- தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.
- எதிர்கால குறிப்புக்கு ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh