ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேட் சென்டர்.. பல்வேறு சிறப்பு கேடர் அதிகாரி பணியிடங்களுக்கு வழக்கமான அடிப்படையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பணியிட விவரங்கள்:
துறை கடன் நிபுணர் – 16 பணியிடங்கள்
தகுதி: சிஏ, எம்பிஏ (நிதி), முதுகலை பட்டம் (நிதிக் கட்டுப்பாடு), மேலாண்மை படிப்பில் முதுகலை, பிஜிடிஎம் (நிதி) பணி அனுபவத்துடன்.
வயது: அக்டோபர் 1, 2022 தேதியின்படி 25 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 63840 முதல் ரூ. 89,890.
தேர்வு: குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: டிசம்பர் 29, 2022.
இணையதளம்: https://www.sbi.co.in