காலிப்பணியிடங்கள்:
ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி வெளியிட்ட அறிவிப்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், பதிவறை எழுத்தாளர், தோட்டக்காரர், துப்புரவு பணியாளர், பெருகுபவர், காவலர் போன்ற பல்வேறு பணிகளுக்கு என 35 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கல்வி விவரம்:
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு செய்வதில் Lower அல்லது Higher சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
- தோட்டக்காரர், துப்புரவு பணியாளர், பெருகுபவர், காவலர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவராக இருக்கலாம். மேலும் கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 37 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Short Listing, Written Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். மேலும் கடைசி நாளுக்கு (02.08.2022) பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh