காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், தமிழ்நாடு டாக்டர். ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) Human Research Management, Finance Management, Marketing Management, Agribusiness Management ஆகிய துறைகளில் காலியாக உள்ள Assistant Professor பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBA அல்லது Ph.D Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் NET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.
ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.28,000/- முதல் அதிகபட்சம் ரூ.38,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
தேர்வு முறை:
Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை (CV, Resume) deanipqs@tnfu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (27.07.2022) அனுப்ப வேண்டும் . கடைசி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh