பணியிடங்கள்:
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், Junior Research Fellow பதவிக்கு என்று மொத்தமாக ஒரே ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி :
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் Metallurgy / Metallurgical Engineering / Metallurgical and Materials Engineering / Materials Engineering / Mechanical Engineering / Production Engineering பாடப்பிரிவில் BE / B.Tech / M.E / M.Tech பட்டம் பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Metallurgical and Materials Engineering பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
அனுபவ விவரம்:
விண்ணப்பதாரர்கள் கற்பித்தல் துறையில் / ஆராய்ச்சி துறையில் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் போதிய அளவிற்கு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.
ஊதிய விவரம்:
- Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது ரூ.31,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
- மேலும் ஊதியத்துடன் 16% HRA வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தேர்வு முறை:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
- மேலும் நேர்காணல் அன்று விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து பரிந்துரைக்கப்பட்ட வடிவில் தயார் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட தபால் முகவரிக்கு பதிவஞ்சல் / விரைவுத் தபால் மூலம் 08.07.2022 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh