இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி மேலாளர் (சட்டம்) பதவிக்கு என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் 03.04.2024க்குள் விண்ணப்பிக்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்:
மேலாளர் – 4
தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்கள்/தன்னாட்சி அமைப்புகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56-க்குள் இருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
ரூ.15,600 – 39,100/- ஊதியம்
விண்ணப்பம்:
இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரபூர்வ http://www.nhai.gov.in இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு – https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/DetailedAdvt_2.pdf