காலிப்பணியிடங்கள்:
- Project Engineer-I பதவிக்கு என 22 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- Electronics பிரிவில் 21 பணியிடங்களும்,
- Mechanical பதவிக்கு ஒரு பணியிடமும் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
- பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் விதிகளின் படி, 01.07.2022 அன்றைக்குள் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும்.
- உச்ச வயது வரம்பில் SC, ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் இருந்து B.E / B.Tech / B.Sc Engineering முடித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
விண்ணப்பதாரர்களுக்கு ஒப்பந்தத்தின் 1வது, 2வது, 3வது ஆண்டு மற்றும் 4வது ஆண்டுக்கு முறையே ரூ.40,000/-, ரூ.45,000/-, ரூ.50,000/- மற்றும் ரூ.55,000/- என ஒருங்கிணைக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
- மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட தகுதியை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு 85 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
- எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் 1:5 என்ற விகிதத்தில் மேற்கூறியவற்றின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.472/- (Rs.400/- + 18% GST)
- PWD, SC மற்றும் ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்து, வாக்-இன் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான தங்கள் விருப்பத்தை தெரிவிக்க, ‘Google படிவங்கள்’ மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh