காலிப்பணியிடம்:
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் Junior Research Fellow, Research Associates பணிக்கு என்று தற்போது 16 பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளது.
- Junior Research Fellow – 15
- Research Associates – 01
கல்வித் தகுதி:
- JRF-01 மற்றும் JRF-04 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் Metallurgical Engineering / Materials Science and Engineering / Mechanical Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech அல்லது M.E / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
- JRF-02 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் Physics பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் NET / GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
- JRF-03 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் Chemistry பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் NET / GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
- RA-01 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் Metallurgical Engineering / Materials Science and Engineering பாடப்பிரிவில் M.E / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தது 3 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த அனுபவம் வைத்திருக்க வேண்டும் அல்லது விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் Metallurgical Engineering/Material Science பாடப்பிரிவில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
24.07.2022 அன்றைய தினத்தின் படி, இப்பணிக்கு 28 வயதானது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC / ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் என வயது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
- Junior Research Fellow பணிக்கு தேர்வாகும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.31,000/- ஊதியமாக கொடுக்கப்படும்.மேலும் இத்துடன் கூடுதல் தொகையாக HRA கொடுக்கப்படும்.
- Research Associates பணிக்கு தேர்வாகும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.54,000/- ஊதியமாக கொடுக்கப்படும். மேலும் இத்துடன் கூடுதல் தொகையாக HRA கொடுக்கப்படும்.
தேர்வு முறை:
விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் மட்டும் Shortlist செய்யப்பட்டு அதன் பின் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ள அழைக்கப்படுவார்கள், இதில் அனுபவம் மற்றும் திறமை பொறுத்து விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே விரைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் சேர்த்து பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து dmrlhrd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.07.2022 அன்றுக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் தனியாக கொடுத்துள்ள ONLINE APPLICATION FORM (Google Form) ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிப்பது அவசியம்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh