ரயில்வேயில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு!

 

ரயில்வே துறையில் 9,144 டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு விரைவில் முடிவடைகிறது.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ரயில்வே துறையில் இந்த டெக்னீசியன் பணியிடங்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பின் முழு விவரங்களுக்கு https://www.rrbapply.gov.in/#/auth/landing கிளிக் செய்யவும்.

 

மொத்த காலியிடங்கள்:

இந்த அறிவிப்பில் 9,144 பணியிடங்கள் உள்ளன.. இதில் 1092 டெக்னீசியன் கிரேடு-1 சிக்னல் பணியிடங்கள் உள்ளன. மேலும் 8,052 டெக்னீசியன் கிரேடு 3 வேலைகள் உள்ளன. மொத்தம் 9,144 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

வயது வரம்பு:

இந்தப் பணிகளுக்கான வயது வரம்புக்கு வரும்போது.. டெக்னீசியன் கிரேடு 1 சிக்னல் பணிகளுக்கு ஜூலை 1, 2024 தேதியின்படி 18 முதல் 36 வயதுக்குள் இருக்க வேண்டும். அதேபோல், டெக்னீசியன் கிரேடு 3 பணிகளுக்கு, ஜூலை 1, 2024 தேதியின்படி 18 முதல் 33 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

 

விண்ணப்பக் கட்டணம்:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், சிறுபான்மையினர், இபிசி பிரிவினர் தலா ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செயல்முறை:

இந்த பணியிடங்களுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

சம்பளம்:

7 CPC இன் நிலை-5 இன் கீழ் டெக்னீசியன் கிரேடு-1 சிக்னல் பதவிகளுக்கு ஆரம்ப சம்பளம் ரூ.29,200. அதேபோல் டெக்னீசியன் கிரேடு-3 பணிகளுக்கு நிலை-2ன் கீழ் ரூ.19,990 சம்பளம் வழங்கப்படும்.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் கல்வித் தகுதி, வயது வரம்பு, மண்டல வாரியான பதவிகளின் எண்ணிக்கை, தேர்வு முறை, பாடத்திட்டம் போன்ற முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்.

 
Exit mobile version