காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், Project Assistant, Research Associate பணிக்கு என்று தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தம் இரண்டு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
கல்வி விவரம்:
- Project Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் public health, social work, nursing பாடப்பிரிவில் ஏதேனும் ஒன்றில் Masters degree முடித்திருப்பது அவசியமாகும்.
- Research Associate பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் life sciences / Public health / Nursing பாடப்பிரிவில் ஏதேனும் ஒன்றில் Masters degree முடித்திருப்பது அவசியமாகும். மேலும் இத்துடன் life sciences பாடப்பிரிவில் PhD பட்டம் பெற்றிருக்கலாம் அல்லது 2 ஆண்டுகள் ஆராய்ச்சி துறையில் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
- மேலும் இத்துடன் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் நன்றாக எழுத, பேச மற்றும் படிக்கத் தெரிவதுடன் தட்டச்சு தெரிந்திருப்பது கூடுதல் சிறப்பாக அமையும்.
வயது வரம்பு:
- Project Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 21 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
- Research Associate பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 21 வயது முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஊதிய விவரம்:
- Project Assistant பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- (basic 9300, GP 4200) மாதம் சம்பளமாக அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- Research Associate பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.49,000/- (plus 18%HRA) மாதம் சம்பளமாக அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் shortlisted செய்யப்படுவார்கள், அதன் பின் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
பல்கலைக்கழக பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து இறுதி நாளுக்குள் ogcovidproject@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh