காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, Area Relationship Executive பணிக்கு என மொத்தமாக 70 காலிப்பணியிடங்கள் இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 10 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.
அனுபவ விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் அதிகபட்சமாக 03 ஆண்டு வரை (0 முதல் 3 ஆண்டு) அனுபவம் வைத்திருப்பது சிறப்பாகும்.
மேலும் இப்பணிக்கு அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவித்துள்ளது.
ஊதிய தொகை:
இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களுக்கு தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றாற்போல் மாத ஊதியமாக ரூ.3,00,000/- முதல் ரூ.3,50,000/- வரை பெறுவார்கள். மேலும் இப்பணிக்கு கூடுதலாக அளிக்கப்படும் தொகை மற்றும் சலுகைகள் குறித்த தகவல்களை அறிவிப்பில் பார்க்கலாம்.
தேர்வு முறை:
இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் பதிவுதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தியா சிமெண்ட்ஸ் பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து 06.08.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh