Sunday, July 14, 2024
Homeவேலைவாய்ப்புபட்டப்படிப்பு போதும்.. 2,700 வங்கிப் பணியிடங்கள் அறிவிப்பு..!

பட்டப்படிப்பு போதும்.. 2,700 வங்கிப் பணியிடங்கள் அறிவிப்பு..!

பஞ்சாப் நேஷனல் வங்கி அதிக எண்ணிக்கையிலான பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள கிளைகளில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 2,700 பணியிடங்களை நிரப்ப உள்ளது.

தகுதி:

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது 20-28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

உதவித்தொகை:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கிராமப்புறங்களில் ரூ.10,000, நகர்ப்புறங்களில் ரூ.12,000, மெட்ரோ பகுதிகளில் ரூ.15,000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 14 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முழுமையான தகவலுக்கு அதிகாரபூர்வ இணையத்தளத்தை பார்வையிடவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு – https://www.pnbindia.in/Recruitments.aspx

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

25 + = 34

- Advertisment -

Latest Update

error: Content is protected !!