கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (GAIL), நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்கிறது. எனவே இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்: 277
பதவிகள்: தலைமை மேலாளர், மூத்த பொறியாளர், மூத்த அதிகாரி, அதிகாரிகள்.
துறைகள்: நிதி மற்றும் கணக்குகள், பாதுகாப்பு, தீ மற்றும் பாதுகாப்பு, இயந்திரவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்றவை.
தகுதி : பணியிடங்களைத் தொடர்ந்து அந்தந்த சிறப்புப் பிரிவில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம்/பட்டம்/பிஇ/பிடெக்/எம்பிஏ/சிஏ/சிஎம்ஏ/முதுகலை பட்டம்/பிஜி டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது : 28 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 1 முதல் 12 ஆண்டுகள்.
சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ. 2.4 லட்சம் வரை வழங்கப்படும்.
தேர்வு: குறுகிய பட்டியல், குழு விவாதம்/நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பம்: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்ப ஆரம்பம்: ஜனவரி 4, 2023.
கடைசி தேதி: பிப்ரவரி 2, 2023.
இணையதளம்: https://www.gailonline.com