அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கான தேர்வு – ஹால் டிக்கெட் வெளியீடு

 

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை தேர்வு மூலம் தகுதியானவர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, இணையதளம் மூலம் ஏராளமானோர் வேலைக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 19ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

விண்ணப்பதாரர்கள் https://www.arasubus.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் 04447749002 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
Exit mobile version