பணியிடங்கள்:
வேலூர் மாவட்ட, மத்திய சிறையில் காலியாக உள்ள 11 பணியிடங்கள் பின்வரும் பணிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது.
- சிப்ப எழுத்தாளர் (Packer Clerk) – 02
- சமையலர் (Cook) – 01
- தோட்ட காவலர் (Garden Watchman) – 01
- தூய்மை பணியாளர் (Sanitary Worker) – 07
கல்வி விவரம்:
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.
- சிப்ப எழுத்தாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- சமையலர் பணிக்கு 08 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தோட்ட காவலர், தூய்மை பணியாளர் பணிகளுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம்:
சிப்ப எழுத்தாளர் மற்றும் சமையலர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
வயது விவரம்:
- விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 32 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- SCA / SC / ST – 05 வருடங்கள் மற்றும் MBC / BC / BC (M) – 02 வருடங்கள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
- சிப்ப எழுத்தாளர் மற்றும் சமையலர் பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 02 ஊதிய அளவின் படி, ரூ. 15,900/- முதல் ரூ.50,400/- வரை மாத சம்பளமாக தரப்படும்.
- தோட்ட காவலர், தூய்மை பணியாளர் பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 01 ஊதிய அளவின் படி, ரூ. 15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- செய்முறை தேர்வு (Practical Test)
- எழுத்து தேர்வு (Written Test)
- நேர்முக தேர்வு (Interview)
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 10.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.
முகவரி:
சிறைக்கண்காணிப்பாளர்,
மத்திய சிறை,
வேலூர் – 632 002.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh