பணியிடங்கள்:
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE பழனி) வெளியிட்ட அறிவிப்பில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள மருந்தாளுனர் (சித்தா) பணிக்கு என 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சித்தா எம்.ஜி.ஆர் கல்லூரி பல்கலைக்கழகங்களில் சித்தா மருத்துவம் துறையில் மருந்தியல் பிரிவில் பட்டய படிப்பு முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
வயது வரம்பு:
மருந்தாளுனர் (சித்தா) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
இப்பணிக்கு என தேர்வாகும் பணியாளர்கள் பணிபுரியும் போது மாதம் தோறும் ரூ.15,000/- சம்பளமாக பெறுவார்கள்.
தேர்வு முறை:
மருந்தாளுனர் (சித்தா) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 08.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.
தபால் முகவரி:
இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
பழனி – 624601,
திண்டுக்கல் மாவட்டம்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh