காலிப்பணியிடங்கள்:
SAP Consultant / Team Lead – 01
SAP Consultant – 06
வயது வரம்பு :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28.11.2022 அன்றைய தேதியின் படி பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- SAP Consultant / Team Lead – அதிகபட்சம் 50 வயது
- SAP Consultant – குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 40 வயது
கல்வி தகுதி:
- SAP Consultant / Team Lead பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் MBA அல்லது Engineering / Information Technology / Computer Science / Computer Application பாடப்பிரிவில் Bachelor Degree அல்லது Computer Science / IT பாடப்பிரிவில் Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- SAP Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் BE, B.Tech, CA, ICWA, MBA, MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவ விவரம் :
- SAP Consultant / Team Lead பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மென்பொருள் மேம்பாட்டுத் துறை மற்றும் SAP தொடர்பான திட்டங்களில் குறைந்தது 04 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 06 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- SAP Consultant விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SAP செயல்படுத்துதல் / பராமரிப்பு போன்றவற்றில் குறைந்தபட்சம் 02 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் விவரம் :
இந்த DFCCIL நிறுவன பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு SAP Consultant பணிக்கு ரூ.1,50,000/- என்றும், SAP Consultant / Team Lead பணிக்கு ரூ.2,00,000/- என்றும் மாத ஊதியமாக பெறுவார்கள்.
தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் walk-in-interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த DFCCIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து நேர்காணல் நடைபெறும் நாள் அன்று (15.12.2022) தேவையான அசல் ஆவணங்களுடன் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
Official PDF Notification – https://dfccil.com/upload/Advt-No-28_2022-for-SAP_KBT2.pdf