காலிப்பணியிடங்கள்:
வட்டார இயக்க மேலாண்மை அலகில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு என 21 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேலும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் மற்றும் கணினி படிப்பில் 6 மாத பட்டையப்படிப்பு (MS Office) தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். கணினி அறிவியல் பட்டப்படிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, 01.07.2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிக பட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். சொந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
ஒப்பந்த முறையில் இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.12,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை இயக்குநர் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 5.45 மணி வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், சிவகங்கை அஞ்சல் – 630562, சிவகங்கை மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 05.08.2022 (வியாழக்கிழமை) பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh