ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 போலீஸ் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்..!

 

ரயில்வே பணிக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு நல்ல செய்தி. ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 சப்-இன்ஸ்பெக்டர் (SI), கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது.

RPFல் 4,660 போலீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் நாளை முதல் தொடங்குகிறது. 452 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களும், 4,208 கான்ஸ்டபிள் பணியிடங்களும் உள்ளன. இந்தப் பணிகளுக்கு ஏப்ரல் 15 முதல் மே 14 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்கள் அறிய https://rpf.indianrailways.gov.in/RPF/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

 

காலியிடங்கள்:

சப்-இன்ஸ்பெக்டர் – 452 பதவிகள்

 

கான்ஸ்டபிள் – 4,208 பதவிகள்

கல்வித் தகுதி:

 

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கான்ஸ்டபிள் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் எஸ்எஸ்எல்சி (10ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

சப்-இன்ஸ்பெக்டர் (SI) பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கான்ஸ்டபிள் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி, OBC களுக்கு 3 ஆண்டுகள்; மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள்; SC மற்றும் ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படுகிறது.

சம்பளம்:

சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.35,400 வழங்கப்படும்.

கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.21,700 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், இபிசி, எஸ்சி, எஸ்டி ரூ.250 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்களுக்கு முதலில் கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடல் திறன் தேர்வு (PET) மற்றும் உடல் அளவீட்டு தேர்வு (PMT) நடத்தப்படும். அதில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, தகுதியானவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப தேதி:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி – 15-04-2024

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – 14-05-2024

 
Exit mobile version